
உலக பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனம் மூலம் சைபர்ட்ரக்கை உருவாக்குவதில் குறிக்கோளாக இருக்கிறார். அமெரிக்காவில் நாளொன்றுக்கு சுமார் 6,500 திரவ எரிபொருளில் இயங்கும் டிரக்குகளுக்கு மாற்றாக மின்சாரத்தில் முழுவதும் தானியங்கி முறையில் இயங்கும் சைபர்ட்ரக்கை டெஸ்லா நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இந்த டிரக்கின் பின் சக்கரத்தில் மட்டும் இயங்கும் (RWD ) மாடலின் அடிப்படை விலை $ 39,900 எனவும் நான்கு சக்கரங்களிலும் இயங்கும் மாடல்கள் $ 49,900 முதல் தொடங்கும் எனவும் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தன.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த சைபர் ட்ரக்கின் உற்பத்தி 2021-ன் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பலமுறை உற்பத்தி தேதிகள் தள்ளிவைக்கப்பட்டு கொண்டே இருந்தது. இந்நிலையில் மஸ்க் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் சைபர் ட்ரக் உற்பத்தி தொடங்கப்பட்டு டெலிவரி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் டெஸ்லா நிறுவனம் தனது முதல் சைபர் ட்ரக் இன் உற்பத்தியை டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிகா தொழிற்சாலையில் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் முதல் சைபர் கட்டுமானம் டெக்சாஸில் உள்ள கிகா தொழிற்சாலையில் முடிவடைந்துள்ளது என்பதை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளது.
அதற்கு வாழ்த்து தெரிவித்து எலான் மஸ்க் ரீ ட்விட் செய்துள்ளார்.