விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவின் திருமணம் லண்டன் அருகே உள்ள லேடி வாக் எஸ்டேட்டில் நேற்று (ஜூன் 22) கோலாகலமாக நடந்தது. இந்த விழாவின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. சித்தார்த்தும் அவரது காதலி ஜாஸ்மினும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண விழாவில் சில நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். அவர்கள் முன்னிலையில் சித்தார்த் மல்லையாவின் திருமணம் வெகு விமர்சியாக நடந்தது.