இஞ்சி பூண்டு பேஸ்ட் என்பது அசைவ உணவுகளில் ஒரு முக்கியமான இடம் பிடிக்கிறது. இஞ்சி பூண்டு பேஸ்ட் இல்லாமல் அசைவ உணவு செய்ய முடியாது. ஆனால் சைவ உணவுகளிலும் இப்போது ஒரு சில உணவுகளில் இஞ்சி பூண்டு பேஸ்ட் முக்கியத்துவம் இருக்கிறது. அந்த வகையில் சமையலில் புதிதாக வந்தவர்களுக்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எப்படி தயாரிப்பது என்று தெரியாமல் கூட இருக்கலாம் அதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
அதுவும் பிகினர்ஸ் சொல்லவே தேவையில்லை எவ்வளவு இஞ்சி போடுறது பூண்டு எவ்வளவு போடுறதுன்னு தெரியாது அவங்களுக்கு உண்டான டிப்ஸ் தான் இது
தேவையான பொருட்கள்👇
🧄பூண்டு ஒரு கப்
🫚இஞ்சி அரை கப்
🧂ஒரு ஸ்பூன் கல் உப்பு
🥄பாதி ஸ்பூன் மஞ்சத்தூள்
💧கால் கிளாஸ் தண்ணீர்
மிக்ஸி ஜாரில் எல்லாம் சேர்த்து நைசாக அரைத்து கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் பண்ணிக்கிட்டா இரண்டு வாரம் முதல் ஒரு மாசம் வரை கெடாமல் இருக்கும்.




