
சைவ பிரியர்களுக்காக சைவ கொத்து பரோட்டா முட்டை கலக்காமல் சுத்த சைவமாக இப்படி செஞ்சி பாருங்க..!!
கொத்து பரோட்டா என்றாலே அதில் கண்டிப்பாக முட்டை இருக்கும். இதனாலேயே சுத்த சைவ பிரியர்கள் இதனை தவிர்ப்பார்கள். இந்நிலையில் சைவ கொத்து பரோட்டா முட்டை சேர்க்காமல் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
முட்டை சேர்க்காமல் கொத்து பரோட்டாவா என்று ஆச்சரியப்படுவீர்கள். சைவ கொத்து பரோட்டா செய்வதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது தக்காளி எல்லாம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு சிறு துண்டுகளாக பரோட்டாவையும் சேர்த்து ஒரு கரண்டி காய்கறி கிரேவி அல்லது குருமாவை சேர்த்து நன்கு புரட்ட வேண்டும். மசாலா ஓடு பரோட்டா துண்டுகள் நன்றாக கலந்ததும் சிறிது மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் சேர்த்து கொத்தமல்லி தலை தூவி நன்றாக புரட்டி இறக்கினால் சுவையான சைவ கொத்து பரோட்டா ரெடி. கண்டிப்பா இந்த மாதிரி செஞ்சு பாருங்க சுவை அசத்தலா இருக்கும்.