
- மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சொடக்கு தக்காளியின் பயன்கள்.
நமது வீட்டில் இருக்கக் கூடிய நாம் உண்ணக்கூடிய உணவு பொருட்களை கொண்டு ஆயிரமாயிரம் வியாதிகளுக்கான மருந்துகளை நம் முன்னோர்கள் வைத்திருந்தனர். அப்படிப்பட்ட ஒன்றுதான் சொடக்கு தக்காளி அவற்றில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன. அவை நமக்கு எவ்வாறு பயனளிக்கின்றன என்று பார்க்கலாம்.
சொடக்கு தக்காளி வைட்டமின் சி, வைட்டமின் ஏ, காரோட்டினாய்ட்ஸ், இரும்புச்சத்து நார்ச்சத்து மக்னீசியம் போன்ற சத்துக்களும் இதில் நிறைந்து இருக்கிறது.
பொதுவாகவே வைட்டமின் சி இருக்கக்கூடிய உணவுப் பொருட்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும். சொடக்கு தக்காளியில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளதால் இதனை எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோய்யை கட்டுப்படுத்தலாம.
சொடக்கு தக்காளியில் இருக்கக்கூடிய மிகவும் அரிதான லித்தெனைட்ஸ் என்னும் அமிலங்கள் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்க வல்லது. குறிப்பாக இது பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயிலிருந்து காக்க உதவுகிறது.
சொடக்கு தக்காளி அளவு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாது உப்புகளை அதிக அளவில் கொண்டுள்ளது. இது நமது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய பெக்டின் என்ற வேதிப்பொருள் நம் எலும்புகள் கால்சியம் சத்துக்களை உறிஞ்ச பயன்படுகிறது.
சொடக்கு தக்காளி கீரையில் காணப்படும் வைட்டமின்கள் மற்றும் கரோட்டினாய்ட்ஸ் நம் கண் பார்வையை பலப்படுத்துவதோடு கண்களில் இருக்கக்கூடிய குறைகளையும் சீர் செய்கின்றது.
சொடக்கு தக்காளி அதிக நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது. இது நமது உடலின் செரிமானத்திற்கு உதவி புரிவதோடு மலக்குடலின் சீரான இயக்கத்திற்கும் உதவுகிறது.
இந்த சொடக்கு இலையில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நம் உடலின் மெட்டபாலிஸத்தை அதிகரித்து உடல் எடை குறைப்பைத் தூண்டுகிறது. இவற்றை நம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உடல் எடை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
சொடக்கு தக்காளியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நம் மூளையின் செயல் திறனை அதிகரித்து நினைவாற்றலை அதிகப்படுத்துகின்றன. மேலும் இவை அல்சைமர் மற்றும் டிமென்சியா போன்ற நோய்களை தடுக்கவும் உதவுகிறது.