சொத்துக்களை தனது பெயருக்கு மாற்ற மறுத்த தாய் தலை துண்டித்து கொலை..!!மதுபோதையில் மகன் வெறிச்செயல்.!!

தாயிடம் சொத்து வேண்டிய தகராறு செய்த குடிகார மகன். இறுதியில் அன்னையின் தலையை துண்டித்து கொலை செய்த பயங்கரம் நடைபெற்றுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சீதாப்பூர் மாவட்டம் மேஜாபூர் கிராமத்தில் வசித்து வருபவர் கமலாதேவி (வயது 65). இவரின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதனால் தனது மகன் தினேஷ் பாசியுடன் (வயது 35) கமலாதேவி வசித்து வந்துள்ளார். தினேஷ் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தாயிடம் மகன் தினேஷ் சொத்தை தனது பெயருக்கு மாற்றி தருமாறு அவ்வப்போது தகராறு செய்தார்.

இதற்கு கமலாதேவி மறுப்பு தெரிவித்துள்ளார். சம்பவம் தினத்தன்று மதுபோதையில் தனது தாயிடம் பிரச்சினை செய்ய அவர் சொத்துக்களை மாற்ற மறுப்பு தெரிவித்தார் .இதனால் ஆத்திரமான தினேஷ் தனது தாயின் தலையை துண்டித்துக் கொலை செய்தார்.

இந்த சம்பவம் நடந்த இடத்திலேயே கமலா பரிதாபமாய் உயிர் இழந்தார், அவரின் உடல் வீட்டின் வாசலிலும் கிடந்துள்ளது, இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை அறிந்தும் நிகழ்வடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் கமலாதேவி உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மகன் தினேஷை தேடி வருகின்றனர். பெண்ணின் தலையையும் மீட்க முயற்சி செய்து வருகின்றனர்.

Read Previous

11 வயது மகளுடன் பெற்றோர் தற்கொலை..!! வெளிமாநிலத்தில் அறையெடுத்து கேரள தம்பதி விபரீத செயல்..!!

Read Next

14 வயது சிறுமியை குடோனுக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்த 19 வயது இளைஞர்..!! பேன்சி கடை உரிமையாளர் அதிர்ச்சி செயல்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular