
இன்றைய சூழலில் பலரும் சொத்து மற்றும் நிலப்பிரச்சனையில் சிக்கிக் கொண்டு தவித்து வருகின்றனர் அப்படிப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று வந்தால் பலன் கிடைக்கும் என்றும் சொத்திற்கான தீர்வு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது…
சேலம் மாவட்டம் திருமணிமுத்தாற்றின் தென் பகுதியில் குகை ஆலம் கோட்டை பொட்டு முனியப்பன் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலில் நிலப் பிரச்சனை திருமண பிரச்சனை மற்றும் இதர பிரச்சனைகளுக்கு இந்த கோவில் நல்ல முன்னேற்றத்தை தருவதாகவும் இங்கு வந்து செல்பவர்கள் கூறுகின்றனர், 11 ரூபாயை மஞ்சத்துணியில் கட்டி முடிந்து வைத்து சென்றால் 40 நாட்களுக்குள் நம் நினைத்தது நிறைவேறும் என்றும் நம்பப்படுகிறது..!!