சொத்தை எழுதி தராத முதல் மனைவி..! இதனால் இரண்டாவது திருமணம் செய்த கணவன்..!போலீசார் தீவிர விசாரணை..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொடுங்குளம் பகுதியில் விஜின்குமார்(36) என்பவர் வசித்து கொண்டு  வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். கடந்து 16 ஆண்டுகளுக்கு முன்பு விஜின்குமார் சந்தியா(34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இதனை அடுத்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்து சந்தியா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்து உள்ளார்.

முறைப்படி சந்தியா கணவரிடம் இருந்து விவாகரத்து எதுவும் வாங்கவில்லை.bசமீபத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் விஜய்குமார் சந்தியாவுக்கு தெரியாமல் 18 வயதுடைய இளம் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து அறிந்த சந்தியா தனது கணவரிடம் முறையிட்ட போது அவர் உனக்கு சொந்தமான சொத்தை எழுதி தருமாறு உனது பெற்றோரிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் எழுதி தரவில்லை. உனது பெற்றோரிடம் 10 லட்சம் ரூபாய் பணமும் கேட்டேன். அதனையும் தரவில்லை. நீயும் சொத்தை எழுதி கொடுக்காததால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என கூறினார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன் என சந்தியா கூறியதும் விஜின்குமார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி வெட்டு கத்தியால் வெட்ட முயன்றார். அவரிடம் இருந்து தப்பித்த சந்தியா மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விஜின்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

திருமணம் ஆனதை மறைத்த போலீசார்..! 3 மாத கர்பிணியான பெண் போலீஸ்..!துணை கமிஷனர் அதிரடி உத்தரவு..!!

Read Next

தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று காற்றாடி பறக்க விட்ட சிறுவன்..!நொடியில் பறிபோன உயிர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular