
ரத்த சம்பந்தத்திற்குள் திருமணம் செய்தால் பிறக்கப் போகும் குழந்தைகள் பாதிப்பு வருமா என்பது குறித்து மருத்துவர் தீப்தி விளக்கம் அளித்துள்ளார்..
சொந்தத்திற்குள் திருமணம் செய்யும் சூழலில் பிறக்கப் போகும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உடல்நிலை மரபணு ரீதியாக பாதிக்கப்படுவதாக பலர் கூறுகின்றனர் இதற்கான அறிவியல் பூர்வ விளக்கத்தை மருத்துவர் தீப்தி வழங்கியுள்ளார்…
அனைத்து மனிதர்களுக்கும் 46 குரோமோசோம்கள் இருக்கும் இதில் 23 தாயிடம் இருந்தும் 23 தந்தையிடம் இருந்தும் குழந்தைகளுக்கு வரும் அதன்படி தாய் மற்றும் தந்தை இருவரின் மரபணுவில் குறைபாடுகள் இருந்தால் அது குழந்தையை பாதிக்கும் என மருத்துவர் தீப்தி கூறுகிறார். ஆனால் சில சமயங்களில் டாமினன்ட் என்ற அடிப்படையில் ஒருவரின் மரபணு குறைபாடோடு இருந்தாலும் குழந்தையை பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். சதவிகித அடிப்படையில் பார்க்கும்போது சொந்தத்தில் திருமணம் செய்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்பட 25% வாய்ப்புள்ளதாக மருத்துவர் தீப்தி கூறுகிறார்.மேலும் குறைபாடு இல்லாமல் அந்த மரபணுக்களை மட்டும் கழட்டி செல்வதற்கு 50% வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் குறைபாடுகள் இன்றி குழந்தை பிறக்க 25 சதவீத வாய்ப்பு இருக்கிறது அதன்படி சொந்தத்தில் இருப்பவர்களை திருமணம் செய்து கொள்ளும்போது அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளின் மரபணுவில் குறைபாடு இருக்க வாய்ப்பு அதிகம் ஆனால் குழந்தைகள் குறைபாடுடன் இருப்பதற்கு 100% வாய்ப்புகள் கிடையாது என மருத்துவர் தீப்தி கூறியுள்ளார்….!!