
2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தலைமை சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற தேர்தல் வியூகம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திமுக நிர்வாகிகள் வீடு-வீடாகச் சென்று திமுகவில் உறுப்பினர்களை இணைக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் & கரூர் திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான ராமேஸ்வரபட்டியில் திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு தேர்தல் வியூகத்தை தொடங்கினார்.