
நீங்கள் சொந்த வீடு கட்ட திட்டமிடுகிறீர்களா அல்லது ஏற்கனவே வீடு இருந்தும் இன்னொரு வீடு கட்ட வேண்டுமா.. முதலில் ஒரு விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். விளக்கிற்கு அருகில் சுத்தம் செய்து பூக்களால் அழகு படுத்துங்கள். மஞ்சளும் குங்குமமும் வைத்து விளக்கை அலங்கரிங்கள். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் வைத்து விளக்கு ஏற்றுங்கள் . இரண்டு திரிகளை ஒன்றாக இணைத்து ஏற்றுவது சிறந்தது. ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து விளக்கின் அடியில் வைத்து விடுங்கள் வீடு இல்லாதவர்கள் மட்டும் இதை பின்பற்ற வேண்டும். ஏற்கனவே வீடு வைத்திருப்பவர்கள் அந்த நாணயத்தை விளக்கின் அடியில் வைக்காமல் நேரடியாக விளக்கில் செலுத்தி விட்டு தீபம் ஏற்றலாம். இந்த முறையை தொடர்ச்சியாக பின்பற்றினால் விரைவில் உங்கள் சொந்த வீட்டிற்கான கனவு நினைவாகும்.