
ஒடிசா மாநிலத்தில் பாம்புக்கடியால் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கியோன்ஜஹார் மாவட்டத்தில் இன்று பயிற்சி மையத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களை பாம்பு கடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சிறிது நேரத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அதன்படி, ராஜநாயக் (12), என்ற மாணவனும் சினேகஸ்ரீ நாயக் (10), எலினா நாயக் (7) என்ற இரண்டு மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.