
சென்னை தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் மாடிப்படிக்கட்டின் பக்கவாட்டில் உள்ள கைப்பிடி கம்பி வழியே கீழே விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. குடியிருப்பின் நான்காவது மாடிக்கு துணியை காய வைக்க சென்ற தாய் வித்தியாவுடன் சென்ற போது அவரது மகள் ஆருத்ரா தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. குழந்தையை காப்பாற்ற வேகமாக ஓடிய தாய் வித்தியாவுக்கு காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.