சோசியல் மீடியாவை கலக்கி வரும் பள்ளி மாணவி யோகா ஸ்ரீ : எங்கு பார்த்தாலும் ஒலிக்கும் இனிமையான குரல்..!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சாம்பியன் சீசன் 4 நிகழ்ச்சியில் பள்ளி மாணவி யோகா ஸ்ரீ கலந்துகொண்டு சோசியல் மீடியாவை கலக்கி வருகிறார்…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரி கம பா லிட்டில் சாம்பியன்ஸ் ரியாலிட்டி ஷோவின் நான்காவது சீசன் மெகா ஆடிஷன் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது இந்த ரியாலிட்டி ஷோவில் எப்படியாவது செலக்ட் ஆகி ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் கரூர் மாவட்டம் பால்வரப்பட்டி கிராமத்தை சேர்ந்த 13 வயதான ஒன்பதாம் வகுப்பு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யோகா ஸ்ரீயும் கலந்து கொண்டு பாடி வருகிறார், மிகவும் எளிமையான குடும்பத்தை சேர்ந்த யோகா ஸ்ரீ யின் தந்தை மகாமுனி டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார் மொத்தம் மூணு பெண்கள் ஒரு ஆண் என்று அவர்களது குடும்பத்தில் அம்முவான நாய்க்குட்டியுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் இருக்கிறார்கள் மூத்த மகள்தான் யோகா ஸ்ரீ இப்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் ரியாலிட்டி ஷோ மெகா ஆடிஷன் முதல் பாட்டிலேயே நடுவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார், கடந்த இரண்டாம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த சீசனில் தமிழகத்தின் மூளை முடுக்குகளிலும் இருந்து மாணவர்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டு பாடல் பாடி அஸ்தி வருகின்றனர் அதில் யோகா ஸ்ரீ ஒருவர், யோகா ஸ்ரீ பாடிவதற்கு முக்கிய காரணம் மணவாடி அரசு பள்ளியின் இரண்டாம் வகுப்பு ஆசிரியரான மகேஸ்வரி தான்..!!

Read Previous

ஊட்டி கொடைக்கானல் எல்லாம் மறந்து விடுங்கள் : இந்த இடத்துக்கு சுற்றுலா சென்றால்…!!

Read Next

கருவேப்பிலையின் நன்மைகள் மற்றும் அதன் மகத்துவத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular