தற்பொழுது உள்ள காலகட்டத்தில் நாம் அனைவரும் வேலைக்கு சென்று வந்தவுடன் ஓய்வெடுக்கிறோம் என்ற பெயரில் சோம்பேறித்தனத்தை வளர்த்துக் கொண்டு வருகின்றோம். ஒரே இடத்தில் உட்கார்ந்து மொபைல் நோண்டுவது, டி.வி பார்ப்பது, சாப்பிட்டவுடன் படுத்து உறங்குவது போன்ற பழக்கங்கள் சோம்பேறித்தனத்தை மேலும் அதிகப்படுத்து வருகின்றது.
பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருப்பது புகைபிடிப்பதற்கு சமமான ஒரு செயலாகும். ஏனென்றால் காலையில் எழுந்ததில் இருந்து பல மணி நேரங்கள் கார்களிலும், பேருந்துகளிலும் அமர்ந்திருக்கின்றோம். மேலும் அலுவலகத்தில் சென்று பணி புரியும் போதும் அமர்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருந்தால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் நம் சோம்பேறித்தனத்தால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது நாம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடும். இதன் மூலம் முதுகு வலி, கழுத்து வலி ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆய்வாளர்கள் நீண்ட நேரம் நிற்கும் போது முதுகில் ஏற்படும் அழுத்தங்களை விட அமர்ந்திருக்கும் போது ஏற்படும் அழுத்தங்கள் அதிகம் என்கின்றார்கள்.
அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து தலை குனிந்து வேலை செய்தால் இரவில். தூங்குவதற்கு சிரமப்படுவார்கள். எந்த ஒரு வேலையும் 6 முதல் 8 மணி நேரங்களுக்கு மேல் அமர்ந்தபடி செய்தால் அதன் பின் விளைவு மிகவும் மோசமானதாக அமையும் அதை சமாளிப்பது கடினம் என்றும் இதய நோய் நிபுணர் நவீன் ராஜ் ரோகித் அறிவுள்ளார். உங்கள் கழுத்து, முதுகு, தோள்பட்டை மற்றும் கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படாதவாறு நாம் இருக்க வேண்டும்.
சோம்பேறியின் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். இதன் மூலம் உடல் பருமன், இதய நோய்கள், ஹைப்பர் டென்சன்.டைப் டு டயாபடீஸ், மெட்டபாலிக் நோய்க்குறி, தூக்கம் பிரச்சனை மற்றும் மனநிலை பிரச்சனை ஆகியவை வரக்கூடும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் கலோரிகள் எரிக்கப்படுவது குறைக்கப்படுகின்றது.
ஒரு நாளைக்கு இந்தியாவில் மட்டும் 20 நிமிடங்களுக்கும் குறைவான சுறுசுறுப்பான உடல் இயக்கத்தில் ஈடுபடுகின்றார்கள் என்று இன்னொரு ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. அதேபோல் 25 சதவீதத்திற்கும் அதிகமான நபர்கள் 8 மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது இந்தியாவில் மட்டும் தான் என்றும் கூறியுள்ளனர். இந்த சோம்பேறித்தனத்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், எனவே 30 நிமிடங்களுக்கு ஒரு முறை காலா நடந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நன்று.