
நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் புரதமும் ஒரு முக்கியமான சத்து ஆகும். இந்த புரதத்தை உடற்பயிற்சி செய்யும் அனைவரும் நிச்சயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனிலும் சிறிதளவு தினமும் எடுத்துக் கொள்வதே நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அப்படி புரதம் அதிகமாக இருக்கும் ஒரு உணவுதான் சோயா பீன்ஸ். இந்த சோயாவில் புரதம் பாஸ்பரஸ் கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இன்று முளைகட்டிய சோயா பீன்ஸ் வைத்து தோசை செய்வது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள் :
சோயாபீன்ஸ் – 3 கிண்ணம்
கேரட் – இரண்டு
முள்ளங்கி – இரண்டு
வெங்காயம், தக்காளி – இரண்டு
அரிசி – சிறிதளவு
பச்சை மிளகாய் – ஐந்து
சீரகம் – சிறிதளவு
உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
கேரட் முள்ளங்கி ஆகியவற்றை துருவி, சோயா பீன்ஸ் வெதுவெதுப்பான நீரல் 2 மணி நேரம் ஊற வைக்கவும். தக்காளி வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பின் ஒரு ஜாரில் சோயா பீன்ஸ் இஞ்சி பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி அரிசி மாவு துருவிய கேரட் முள்ளங்கி வெந்தயம் சீரகம் தக்காளி உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி விடவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் எண்ணெய் ஊற்றி தோசை போல இதை ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சோயாபீன்ஸ் தோசை தயார்.