சோற்றுக்கற்றாழை இயற்கை மூலிகை கொண்டதாகும் இதனை நாம் சாப்பிடும் பொழுது நம் உடலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் ..
சோற்றுக்கற்றாழை இதன் குணம் கண்களுக்கு இதமளிக்கும் உடலை தேற்றி பல மொழிக்கும் கல்லீரலை ஊக்குவிக்கும் மூல நோயை குணமாக்கும் உடம்பில் எரிவை நீக்கும் முடி நன்றாக வர செய்யும் கர்ப்பச்சூட்டை தணிக்கும் தோல் அரிப்பு, குட்டநோய் போன்றவற்றை தடுக்கும், மேலும் கற்றாழையில் பல வகைகள் உள்ளன இதன் இதழின் உள்ளே சோறு போன்ற பதார்த்தம் இருப்பதனால் சோற்றுக்கற்றாழை என்று பெயரினால் அழைக்கப்படுகிறது இது விதை இல்லாத தாவரமாகும், சித்தர்கள் இதற்கு குமரி கன்னி என்று பெயர் சூடியுள்ளனர், கற்றாழையில் மற்றொரு வகை உண்டு அது யானை கற்றாழை எனப்படும், யானை கற்றாழை சாம்பல் நிறம் உள்ளது இதன் மடல்கள் பெரியவை சோற்றுக்கற்றாழை பச்சை நிறம் உள்ள மடல்களைக் கொண்டது இது சிறு செடியாகும் இதன் மடல்கள் கடினமானவையாகும் சதைப்பற்று கொண்டவனாய் இருக்கும், இவற்றின் ஓரங்கள் கொக்கிமுருக்கள் இருக்கும் இதனுடைய சாற்றை மற்ற மருந்து சரக்குகளை சுத்தம் செய்வதற்கும் பலவிதமான மருந்துகளை அரைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர், கற்றாழையின் சோற்றை எடுத்து நன்றாக கழுவி விட்டு அதனோடு பனங்கற்கண்டையும் சேர்த்து உஷ்ண வியாதிகளுக்கு உண்பதனால் உடல் ஆரோக்கியமாக காணப்படும் மேலும் உடலில் காணப்படும் அரிப்பு சிறுநீரில் காணப்படும் எரிச்சல் கண் எரிச்சல் கண் அரிப்பு போன்ற கண் நோய்களுக்கு கற்றாழை சோற்றை எடுத்து கண்ணில் வைத்து கட்டி வருவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்..!!




