ஜனநாயகன் படத்தில் இருந்து ஒரு சிறப்பான அப்டேட்..!! டீசரை வெளியிட காத்திருக்கும் படக்குழு..!!

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராகவும் மக்களால் தளபதி எனவும் அழைக்கப்படும் நபர்தான் விஜய் அவர்கள். இவரது படங்கள் எப்போது வெளிவந்தாலும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து குடும்பங்களும் கொண்டாடி தீர்க்கும். விமர்சனங்களை தாண்டி அவருக்காக படங்களை சென்று பார்த்து வரும் குடும்பங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இவரது அரசியல் பயணத்தை தொடங்குவதற்காக இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் அவரது கடைசி படமான ஜனநாயகன் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று நமக்கு நன்றாகவே தெரியும். அந்தப் படத்தில் இருந்து அப்டேட் எப்போது வரும் என்று மக்கள் ஆவலாக காத்திருக்கும் வேளையில் ஒரு இன்பதிர்ச்சி. தளபதி விஜயின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு ஒரு அப்டேட் கொடுக்க பட குழு காத்திருக்கிறது.

இனி இந்த படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட் வந்தாலும் அதை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி தீர்ப்பார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரியும். அதனால் இந்த படத்தின் டீசரை பழக்குழு விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிடுவதாக திட்டமிட்டுள்ளது. மேலும் படம் வரும் ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

நாம் கோவிலுக்கு வாங்கி செல்லக்கூடிய பூக்களுக்கு இத்தனை சாஸ்திரங்களா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

பூசணிக்காயை வைத்து இந்த உணவை செய்து பாருங்கள்..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular