ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இன்று மதியம் திடீரென நில நடுக்கும் ஏற்பட்டுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் அறிவித்து உள்ளது.
இன்று மதியம் 12 .12 மணியளவில் ஏற்பட்டுள்ள நிலடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 என பதிவாகியுள்ளது. சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் உருவாகியுள்ளதாக கிழக்கு சிபா மாகணத்திற்கு அருகே 35.2 டிகிரி வடக்கு அட்சரகையும் மற்றும் 104.5° தீர்க்கரேகையில் கணிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கம் டோக்கியோவின் 23 வர்டுகளிலும் உணரப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள். மேலும் இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை .இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளனர்.