
சினிமா தொடர்பான விழாக்களில் தொடர்ந்து சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்துபவர் தயாரிப்பாளர் கே.ராஜன். இவர் சமீபத்தில் ‘ராயர் பரம்பரை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், “இப்போது நிறைய படங்கள் ஜாதி வெறியை தூண்டுவதாக அமைந்துள்ளது. குறிப்பிட்ட சமூகத்திற்கு பாதிப்பு என ஜாதி வெறியைத் தூண்டுகிறார்கள். ஆனால், இந்த படத்தில் மதம் பற்றி நல்ல விஷயத்தை காட்டுகிறார்கள். முஸ்லீம் பெண்ணை காப்பாற்ற இந்து கடவுளின் வேலை தூக்கி வருகிறான் நாயகன்” என்றார்.