ஜிகா வைரஸ் பரவலால் பெரும் அச்சுறுத்தல்..!! 66 பேர் பாதிப்பு..!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஜிகா வைரஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக புனேவில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஜூன் மாதம் முதல் இதுவரை 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 26 கர்ப்பிணிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கின்றனர்.