
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஹீத் ஸ்ட்ரீக், கடந்த சில ஆண்டுகளாகவே கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயால் அவதியடைந்து வந்தார். இதற்காக தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 49வது வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவர் 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.