
ஜியோ, airtel-க்கு பின் தற்பொழுது வோடபோன்- ஐடியா மொபைல் கட்டணத்தை 20% உயர்த்தி உள்ளது. இதனால் பயனர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வோடபோன்- ஐடியாவின் புதிய கட்டடங்கள் வருகின்ற ஜூலை நான்காம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது,அதே நேரத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் புதிய கட்டணங்கள் ஜூலை மூன்றாம் தேதி முதலே அமல்படுத்தப்பட உள்ளது.
வோட போன்- ஐடியாவின் மலிவான ரூ.179 திட்டம் தற்பொழுது 199-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது 28 நாட்கள் வேலிடிட்டி 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.
ரூ. 299 திட்டமானது ரூ.349க்கு மாற்றம் செய்யப்பட்டது. அதே சமயத்தில் வோடபோன் ஐடியாவின் ரூ.269 ரூபாய் திட்டம் ரூ.299 திட்டம் கிடைக்கும் இது வேலிடிட்டி 28 நாட்கள் இது 28 நாட்கள் வேலிடிட்டி அண்ட் லிமிடெட் வழங்குகிறது, மேலும் அழைப்பு மற்றும் 2ஜிபி டேட்டா கொண்டுள்ளது.
56 நாட்கள் வேலிடியுடன் கூடிய ரூ.539 ரீசார்ஜ் தற்பொழுது ரூ.649க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் VI இன் 84 நாட்கள் வேலிடிட்டி உடைய 459 ரீசார்ஜ் தற்பொழுது ரூ.509க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஆறு ஜிபி டேட்டா வரம்பற்ற அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் கொண்டுள்ளது.
365 நாட்கள் வருடாந்திர திட்டம் ரூ. 1799 விலையில் இருந்த VI இன் 365 வருடாந்திர திட்டம் தற்பொழுது ரூ.1999க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது ,இது 24 gb டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் கொண்டுள்ளது.