ஜிவி பிரகாஷ் குமாரின் கள்வன் திரைப்படம் ஓடிடி வெளியீடு தேதி அறிவிப்பு..!!

இயக்குனர்  பிவி சங்கரின் இயக்கத்தில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “கள்வன்” திரைப்படம், ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி  தயாரித்து வழங்கி உள்ளது.

திரைப்படத்தில் ஜிவி பிரகாசுடன் பாரதிராஜா, இவானா, தீனா உட்பட்ட பலரும் முக்கிய  கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து உள்ளனர். சான் லோகேஷ் எடிட்டிங் இல் பிவி சங்கர் ஒளிப்பதிவில்  நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் மாதம் நான்காம் தேதி திரைக்கு வந்த இத்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது, படம் பல தரப்பிலும் பாராட்டுகளை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்பொழுது படம் ஓடிடியில் வெளியிட்டுக்கு தயாராகி வருகிறது, அதன்படி மக்கள் பாராட்டுகளை பெற்ற “கள்வன்” திரைப்படம் மே மாதம் 14ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓ டி டி தளத்தில் வெளியாக உள்ளது. படத்தை திரையரங்கில் பார்க்க இயலாதவர்கள் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் சந்தா வைத்திருப்பவர்கள் அதனை கண்டு ரசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

பாவாடை தாவணியில் ஜொலிக்கும் பிக்பாஸ் ஜனனி..!! செம கியூட்டாக போட்ட ஆட்டத்தை பார்த்தீங்களா..!! வைரல் வீடியோ..!!

Read Next

திருமணமாகாத விரக்தி; 29 வயது இளைஞர் மதுவில் விஷம்கலந்துகுடித்து தற்கொலை..!! விருதுநகரில் சோகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular