
இன்று பலரும் தன் ஆரோக்கியதில் கவனம் செலுத்தி வருவதை கண்டுகூடாக பார்க்க முடிகிறது. அதில் பலரும் யோகா, உடற்பயிற்சி, மற்றும் தேக உடற்பயிற்சியில் பங்கேற்று தன் உடல்நிலையில் கவனம் செலுத்தி வருகிறார்கள் . அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளிலும் ஆரோக்கியம் அடங்கி இருக்கிறது என்பதை பலரும் மறந்து வருகிறார்கள் . உடலின் எடையை குறைக்க பெரும்பாலும் ஜும்பா நடன பயிற்சி உதவிகரமாக இருக்கிறது.
மஹாராஷ்டிராவில் நிகழ்ந்த சம்பவம்…
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சத்ரபதி சாம்பாஜி நகரில் ஜும்பா பயிற்சி நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், பலரும் கலந்து கொண்டு தங்கள் உடலில் உள்ள கெட்ட கலோரிகளை அகற்றும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர் . இந்த வகையில், மஹாராஷ்ட்ராவை சேர்ந்த தொழிலதிபர் கவல்ஜித் சிங் பாகா, பயிற்சியின் போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். அதைதொடர்ந்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த செய்தி அங்கிருக்கும் சக பயிற்சி பெறுவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
मौत का लाइव वीडियो pic.twitter.com/mCeN9JMJDM
— parmod chaudhary (@parmoddhukiya) July 21, 2024