ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: 171 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி..!!

12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். மாத்ரே 4 ரன்னில் அவுட் ஆன நிலையில் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஐக்கிய அரபு அமீரக வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த சூர்யவன்ஷி சதம் விளாசினார். அவர் 95 பந்துகளில் 14 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 171 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து களமிறங்கிய அனைவரும் அதிரடியாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 433 ரன்கள் எடுத்துள்ளது. 

Read Previous

தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவு புண்ணியம்..?? எவ்வளவு பலன்..?? எவ்வளவு நல்லது..??

Read Next

கூகுள் ஜெமினி 3-க்கு போட்டியாக ஓபன்ஏஐயின் சாட்ஜிபிடி 5.2 அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular