
ஜூனியர் கிரிக்கெட்டில் கேப்டனாகும் டிராவிட் இளைய மகன்..!!
14 வயதுக்கு உட்பட்டோருக்கான தென்மண்டல ஜூனியர் கிரிக்கெட்டில் கர்நாடக அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 23 ஆம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை, கேரளாவில் வைத்து இந்த தொடர் நடைப்பெற உள்ளது. ஏற்கனவே டிராவிட்டின் மூத்த மகன் சமித், இந்த அணியில் இடம் பெற்று இரட்டை சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.