ஜெகன் மோகன் ரெட்டி நிலைதான் திமுகவுக்கு ஏற்படும் சாபமிட்ட சீமான்..!!

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது..

இந்த நிலையில் இதனை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு நூலகங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டுள்ளன, அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைஞருக்கு சிலை அமைக்கப்பட்டு வருகின்றன, ஆனால் அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைக்கக்கூடாது என நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, இந்த நிலையில் சென்னையில் செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கீழம்பாக்கத்தில் இருந்து பேருந்து நிலையம் அமைக்க தொடங்கியது, அதிமுக அதனை உதயசூரியன் வடிவத்தில் கட்டி கருணாநிதி பெயரை வைத்து திமுக அரசு அதனை திட்டங்களுக்கும் கருணாநிதி பெயர் வைப்பது பிரச்சனை இல்லை ஆனால் மக்கள் பணத்தில் வைக்காமல் உங்கள் செலவில் அடையாளங்களை உருவாக்கி கருணாநிதி பெயரை சூட்டுங்கள் என்று கூறினார். தொடர்ந்து 250 கோடிக்கு நினைவிடம் கட்டியுள்ளது யாருடைய பணத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 300 கோடிக்கு நூலகம் கட்டி வருவது யாருடைய பணத்தில் வ உ சிக்கு தலைநகர் சென்னையில் சிலை இருக்கிறதா, அதிகாரம் என்பது நிலையானது என திமுக ஆடிக் கொண்டிருக்கிறது,அருகில் இருக்கும் இலங்கையை பாருங்கள் வங்கதேசத்தை உருவாக்கிய முஜிபுர் ரகுமான் சிலை என்ன ஆனது என பாருங்கள், ஆந்திராவில் அனைத்து இடங்களும் ஜெகன்மோகன் ரெட்டி தனது தந்தை ராஜசேகர் ரெட்டி பெயரை வைத்தார் ஆனால் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பதற்கு முன்பாகவே ராஜசேகர் ரெட்டியின் சிலை உடைக்கப்பட்டு விட்டது அதே நிலைமை இங்கும் உருவாகும் காஞ்சியில் மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் துவக்கம் என்னை போன்ற தன்மானம் உள்ள தமிழனிடம் ஒரு நாள் அரசு அதிகாரம் சென்றால் அத்தனையும் பட்டல் ஆகிவிடும் நாம் தமிழர் மகன் என் தேசம் தமிழ் தேசம் என் அரசியல் என்பது தமிழ் தேசிய அரசியல் நான் திராவிடத்தில் பாதி தமிழ் தேசியத்தில் பாதி கிடையாது 2026 சட்டமன்றத்தில் தனித்து தான் போட்டி எங்கள் கால்களை நம்பி தான் நாங்கள் பயணம் செய்வோம் அடுத்தவர் கால்களை நம்பி பயணம் செய்ய மாட்டோம் என்று ஆவேசமாக நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார்..!!

Read Previous

ராமநாதபுரம் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தளவாயல் சேதுபதி மன்னரின் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு..!!

Read Next

வசூல் வேட்டையில் அசத்திய லக்கி பாஸ்கர் : 11 நாட்கள் கலெக்சன் எவ்வளவு தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular