
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது தற்போது சரிய தொடங்கியுள்ளதால் நகைப்பிரியர்கள் அதீத மகிழ்ச்சியில் உள்ளனர். அதாவது, நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அந்தவகையில் , இன்று (07.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.240 குறைந்து 1 சவரன் ரூ. 64,240 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,030 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,08,000 ஆகவும், 1 கிராம் ரூ. 108 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.