
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “ஜெயலலிதா சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.