
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்ச்சல் என்ற தொடர் நாளுக்கு நாள் டிஆர்பி ரேட் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்த தொடரில் ஜனனி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் மதுமிதா. கன்னட நடிகையான இவர் எதிர்நீச்சல் முக்கிய வில்லனாக இருக்கும் குணசேகரனின் தம்பி மனைவியாகவும், பெண் விடுதலை மற்றும் சமத்துவத்தை பற்றி பேசும் பெண்ணாகவும் நடித்து உள்ளார்.
இவரது கதாபாத்திரத்திற்கு இளம் பெண்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. கன்னட சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் அறிமுகமானவர். தமிழில் எதிர்நீச்சல் தொடரில் தான் முதல் முதலாக நடித்திருக்கிறார் .
மேலும் இந்த தொடரும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்திருக்கிறது . இவரது துணிச்சல் மிக்க கதாபாத்திரத்தை அனைவரும் பாராட்டிக் கொண்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தற்போது சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான நூ காவாலயா என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்று வருகிறது.
மேலும் இந்த பாடலுக்கு தமன்னாவின் நடனம் அனைவரின் மனதையும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு இருக்கிறார் என்றே கூறலாம். தற்போது இந்த பாடலுக்கு எதிர்நீச்சல் ஜனனி நடனமாடி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு வருகிறது. எதிர்நீச்சல் ஜனனியா என ரசிகர்களை ஆச்சரியமட்டும் அளவிற்கு கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார்.