ஜேஎன் 1 குறித்து அச்சம் வேண்டாம்..!!

ஞாயிற்றுக்கிழமையன்று தெற்கு கோவாவில் பாஞ்சஜன்ய வரா பத்ரிகா ஏற்பாடு செய்திருந்த ‘சாகர் மந்தன் 2.0’ நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் பரவி வரும் புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 வைரஸ் குறித்து கவலைப்பட தேவையில்லை என கூறியுள்ளார். மேலும் நாடு கடந்த காலங்களில் கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடியுள்ளதாகவும், புதிய மாறுபாடு குறித்து மக்களும் சுற்றுலாத் துறையினரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Read Previous

பெண்கள் குறித்து பிரிட்டன் அமைச்சரின் சர்ச்சை கருத்து..!!

Read Next

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – முக்கிய அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular