
காலி பெருங்காய டப்பா அதில் வாசனை அதிகமாக இருக்கு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சமையல் மணதிற்காக பயன்படுத்தப்படும் இந்த பெருங்காயம் ஏராளமான மருத்துவ நன்மை கொண்டது…..
சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களை வைத்து நமக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று நாம் பல புத்தகங்கள் மற்றும் இணையதளங்களில் பார்த்திருக்கிறோம். அந்த வகையிலான ஒரு சமையல் மசாலா பொருள் தான் பெருங்காயம், காலி பெருங்காய டப்பா அதில் வாசனை அதிகமாக இருக்கு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சமையல் வாசனைக்காக பயன்படுத்தப்படும் இந்த பெருங்காயம் ஏராளமான மருத்துவமனை கொண்டது..
இந்த பெருங்காயத்தின் வைரஸ் எதிர்ப்பு பண்புதான் சளி தொந்தரவு இரும்பல் மூச்சுக்குழாய் அடைப்பு கொண்ட பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை எதிர்த்து போராடும் ஜீரணம் தொடர்பான பிரச்சனை அஜீரண கோளாறுகள் ஆகியவற்றை தடுக்க பெருங்காயம் பெரிய அளவில் உதவி செய்யும். ரத்த நாளங்களில் பிரஷரை குறைக்கும் திறன் பெருங்காயத்திற்கு உண்டு. புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் பெருங்காயம் குறிப்பாக கல்லீரல் மற்றும் மார்பக புற்றுநோய்க்கு எதிராக போராடி அதன் பாதிப்பை குறைக்கும் தன்மை பெருங்காயத்திற்கு உண்டு. புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சி மற்றும் அது பரவும் தன்மையை குறைக்க பெருங்காயம் உதவுகிறது மூளை தொடர்பான பிரச்சனை ஞாபகம் வருதே போன்ற பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் நரம்பு மண்டல பிரச்சனைகளை குறைக்கும் ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் பெருங்காயத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று டாக்டர் கூறுகின்றனர்….!!