ஞாபக மறதி பிரச்சனையை போக்க எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்..!!

ஞாபக மறதி பிரச்சனையால் தற்போது பெரும்பாலானோர் அவதிப்படுகின்றனர். இதனால் முக்கியமான பணிகள் அல்லது பொருட்களை மறந்து விடும் நிலை ஏற்படுகிறது.

தூக்கமின்மை, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அதிகமாக செல்போன்பயன்படுத்துவது மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியவை நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே ஞாபக சக்தியை அதிகரிக்க உங்கள் உணவில் சில முக்கிய உணவுகளை சேர்க்க வேண்டும்.

தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. கீரையில் இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளது.

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் நல்லது. முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பதால் பெரும்பாலானோர் இதனை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் மஞ்சள் கருவில் வைட்டமின் டி, வைட்டமின் பி 12, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால் இது மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிடலாம்.

தயிர் நினைவாற்றல் அதிகரிக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை தயிர் சாப்பிடும் பெண்களிடம் யுசிஎல்ஏ நடத்திய ஆய்வு ஒன்றில், அவர்களின் மூளை செயல்பாட்டில் மாற்றம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் தயிரில் குடல் ஆரோக்கியதை மேம்படுத்தும் ப்ரீபயாடிக் உள்ளது.

மீன் அயோடின், செலினியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல ஆதாரமாகும். மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன. எனவே வாரம் இரண்டு முறை மீன் உணவுகளை சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

வால்நட் நம் மூளை போல காட்சியளிக்கும். இதற்கு முக்கிய காரணம் வால்நட் நமது மூளை செயல்பாட்டிற்கு உதவுகிறது என்பதேயாகும். இதனை தினமும் சாப்பிடுபவதால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அல்சைமர் நோய் வருவதை தடுக்க முடியும்.

Read Previous

கள்ளக்காதலை கண்டித்த மாமியார்..!! பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மருமகள்..!!

Read Next

டீச்சரை பழிவாங்க யூடியூப் பார்த்து BOMB தயாரித்த மாணவர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular