
டாய்லெட்டில் தொலைபேசி பயன்படுத்துவதால் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா..??
இந்த காலகட்டத்தில் அனைவரும் டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்துகிறோம். செல்போன் டாய்லெட்டில் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் மிக மிகக் குறைவு என்று சொல்லலாம். நீண்ட நேரம் டாய்லெட்டில் அமர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் மிகப்பெரிய ஆபத்துகள் உண்டாகும். இந்நிலையில், டாய்லெட்டில் நீண்ட நேரம் அமர்ந்து தொலைபேசி பயன்படுத்துவதால் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
டாய்லெட்டில் நீண்ட நேரம் தொலைபேசி பயன்படுத்துவதால் முதலில் பாதிப்படைவது ரத்தநாளங்கள் தான். அது மட்டும் இன்றி இவ்வாறு செய்வதால் மலச்சிக்கல் மற்றும் கர்ப்ப காலத்தில் உள்ளவர்களுக்கு மூலநோய் வரக்கூட வாய்ப்பு உள்ளது.
கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்து தொலைபேசி பயன்படுத்துவதால் தொலைபேசியில் 18 மடங்கு கிருமிகள் அதிகரிக்கும். இதனால் தேவையில்லாத நோய்கள் நம் உடலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. 10 நிமிடத்திற்கு மேல் அழுத்தம் கொடுத்து அமர்வதால் மலக்குடல் பிரச்சினை ஏற்படும்.