நம் அன்றாட வாழ்வில் அனைவரும் பிரைவசி இல்லை என்று டாய்லெட்டில் பிரைவேசி தேடி வருகின்றனர். இதை பழக்கமாகவே கொண்டவர்கள் தற்போது ரிலாக்ஸ்காக டாய்லெட்டில் போன் யூஸ் பண்ணி வருகின்றனர். டாய்லெட்டில் அதிக நேரம் செலவழிக்க கூடாது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.
ஆனால் பலரும் காலையில் அரை மணி நேரம் ஆவது அந்த டாய்லெட்டில் உட்கார்ந்து போன் யூஸ் பண்ணி விட்டு தான் அன்றாட வாழ்வை தொடங்குகின்றனர். கேட்டால் இது ஒரு ரிலாக்ஸ் சார் என்று பலரும் பதில் சொல்லி வரும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.இ ந்தப் பழக்கம் அதிகமாக ஆகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இவ்வாறு கழிவறையில் தொலைபேசி உபயோகிப்பது சரியா? அவ்வாறு செய்தால் என்னென்ன வியாதிகளுக்கு நாம் ஆளாவோம் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
இவ்வாறு நாம் செய்வதால் ரத்த நாளங்கள் என்பது பெரிதும் பாதிக்கும். மற்றும் டாய்லெட்டில் அதிகமாக நேரம் செலவிடும்போது ஆசனவாய் சுற்றி உள்ள ரத்த நாளத்தில் பெரிதும் அழுத்தம் ஏற்படும். கழிவறையில் நீண்ட நேரம் தொலைபேசி யூஸ் பண்ணும்போது 18 மடங்கு தொலைபேசியில் கிருமிகள் அதிகரித்து காணப்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். அதுமட்டுமின்றி ஒரு சில டாய்லெட்டில் அமர்ந்தவாறு வேறு ஒருவருடன் போனில் பேசிக்கொண்டு இருப்பார்கள். இது போன்ற சமயத்தில் கிருமிகள் நம் வாய் மற்றும் மூக்கு வழியாக உள்ளே செல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் பல வியாதிகள் உண்டாகும். மேலும் அரை மணி நேரம் அழுத்தம் கொடுத்து டாய்லெட்டில் உட்காரக்கூடாது. ஏனென்றால் 10 நிமிடம் நாம் அமரும்போதே மலக்குடல் பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.




