டாஸ்மாக் விலை உயர்வு.. குடிமகன்களுக்கு புது தலைவலி..!!

தமிழக அரசானது மதுபானங்களின் விலையை உயர்த்தி உத்தரவிட்டது. பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் விலை உயர்வு நடைமுறைக்கு வந்தது. குவாட்டர் பாட்டில்களுக்கு 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு செல்லும் மதுபிரியர்கள் புதிதாக குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளனர். அதாவது ஆஃப் பாட்டில் மதுபானம் கேட்டால் கடை ஊழியர்கள் இரண்டு குவாட்டர் பாட்டில்கள் தருகின்றனர். பாட்டில் ஒன்றுக்கு 10 வீதம் இரண்டுக்கு 20 ரூபாய் வசூலிக்கின்றனர். காரணம் ஆஃப் பாட்டிலுக்கு ரூ.10 மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்பதால் இரண்டு குவாட்டர் பாட்டில்கள் தருகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளனர்.

Read Previous

பெற்றோரை கைவிட்டால் 3 வருடம் சிறை..!!

Read Next

சாந்தன் தாயகம் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்படும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular