டிசம்பர் 15 அன்று வெளியாகவுள்ள தமிழ் படங்கள்: விபரம் இதோ.!!

2023 ஆம் ஆண்டின் இறுதி கட்டத்தை நோக்கி உலகம் நகர்ந்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையும் தனது தீவிரத்தின் உச்சத்தை நோக்கி நகர்கிறது. எவை எப்படி போனாலும் மக்களுக்கு வார இறுதியின் தொடக்கத்திற்கு முன் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் பல படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றது.

அந்த வகையில் நடப்பு வாரத்தில் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்து இன்று காணலாம்.

1. ஆலம்பனா:

பார்வதி நாயர், வைபவ் ரெட்டி,யோகி பாபு, காளி வெங்கட், தீனா, ரோபோ சங்கர், முனிஸ்கான், பாண்டியராஜன் ஆகிய பலரின் நடிப்பில் பாரி கே விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஆலம்பனா. இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி அன்று திரைக்கு வரவுள்ளது.

2)ஃபைட் கிளப்

உரியடி புகழ் விஜயகுமார், மோனிஷா மோகன், அவினாஷ், ரகுதேவன், கார்த்திகேயன், சந்தானம், சங்கர் தாஸ், சரவணன் வேல் உள்ளிட்ட பலரின் நடிப்பில் திரைக்கு வர திரைக்கு வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி அன்று வரவுள்ள திரைப்படம் ஃபைட் கிளப். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் முதல் திரைப்படமாக தயாரித்து வழங்க உள்ளது.

3)கண்ணகி

பெண்களின் வாழ்வியலை மையப்படுத்தி அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப் மற்றும் ஷாலின் ஜோயா உட்பட பலர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் தான் கண்ணகி. இந்த திரைப்படம் சமூக கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. இப்படத்தை எஸ்வந்த் கிஷோர் இயக்கி உள்ளார்.

4)சபாநாயகன்

சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் கார்த்திகா முரளிதரன் மேகா ஆகாஷ்,சாந்தினி சவுத்ரி மறைந்த நடிகர் மயில்சாமி ஆகிய பலரும் இணைந்து நடித்து உருவாகியுள்ள திரைப்படம் சபாநாயகன். வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி அன்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் அசோக் செல்வனின் காதல் காமெடி பாச பிணைப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

இவை தவிர டி எஸ் ராஜகுமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள அகோரி ராஜா தேசிங்கு இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்ரீ சபரி அய்யப்பன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

Read Previous

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது..!!

Read Next

கடற்கரையில் கவர்ச்சி கடலாக மாறிய ஷிவானி..!! வைரலாகும் வீடியோ.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular