தேவையான பொருள்: கசகசா 20 கிராம் பால் சிறிதளவு முந்திரி பருப்பு 20 கிராம் செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 20 கிராம் கசகசா மற்றும் 20 கிராம் முந்திரி பருப்பு ஆகிய இரண்டு பொருட்களையும் சிறிதளவு பால் சேர்த்து நன்கு பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ளவும். அரைத்த பொருட்களை முகத்தில் தோன்றும் பருக்களின் மீது தடவி 30 நிமிடம் காய வைத்து சாதாரண நீரில் முகம் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் தோன்றும் பருக்கள் மறைந்து முகம் பிரகாசமாக தோன்றமளிக்கும். இந்த மருத்துவம் மிகவும் பயனளிக்க கூடியது ஆகும்.