டிமான்டி காலனி 2 வெற்றியால் மிளிரும் பிரியா பவானி சங்கர்..!! லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளினியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து அதன் பின்னர் சீரியலில் நடித்து சின்னத்திரை சீரியல் நடிகையாக பிரபலமானவர்தான் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த ஹீரோயினாக பார்க்கப்பட்டார்.

அதை அடித்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் துவங்க மேயாத மான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து நல்ல அடையாளத்தை ஏற்படுத்தியது. அதை எடுத்து கடை குட்டி சங்கம் மான்ஸ்டர் மாஃபியா களத்தில் சந்திப்போம் கசடதபர உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இதனுடைய கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே ராஜவேலு என்ற காதலனை காதலித்து இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமான்டி காலனி 2 திரைப்படம் வெளியாக திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள்.இந்நிலையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தொடர்ந்து பல தோல்விகளுக்கு பிறகு பிரியா பவானி சங்கர் வெற்றியை கொடுத்திருக்கிறதால் டிமான்டி காலனி 2 திரைப்படம் வெற்றியை கொடுத்திருக்கிறதால் அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு தோற்றமளிப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Read Previous

உள்ளங்கை, காலில் அதிக வியர்வை வருவதற்கு என்ன காரணம் தெரியுமா?.. தீர்வு என்ன?..

Read Next

JIO வின் கவர்ச்சிகரமான இந்த ரீசார்ஜ் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?.. முழு விவரம் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular