
அமெரிக்க அதிபராக டிரம்ப பதவி ஏற்றதிலிருந்து பல அதிரடியான முடிவுகளை எடுத்து வந்துள்ளார். இதனால் தங்க விலை குறைவு வெள்ளி விலை குறைவு வரிகள் அதிகரிப்பு போன்ற பல பிரச்சனைகள் பல நாட்டுக்கு வந்த வண்ணம் உள்ளன. இப்பொழுது அவர் எடுத்த முடிவு அவரது சொந்த நாட்டிற்கு ஒரு பெரும் இடியை விதித்துள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
உலக நாடுகளுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர்த்தக போரில் ஈடுபட்டு வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதனால் அமெரிக்க விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவர் சீனாவுக்கு 104% வரை வரி விதித்திருப்பதால் அந்நாட்டிலிருந்து பொருட்கள் இறக்குமதியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலைவாசி அதிகரிக்கலாம். அல்லது உணவுகளில் பற்றாக்குறை ஏற்படலாம் என்னும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்க மக்கள் உணவு பொருட்களை கூடுதலாக வாங்கி தங்களது வீட்டில் தேக்கி வைத்துள்ளனர். மேலும் டிரம்ப் முடிவுகளால் பல நாடுகள் அமெரிக்க உட்பட பெரும் பாதிப்புகளை சந்திக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.