கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில், டிரான்ஸ்பார்மரில் ஏறிய மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்ட நிலையில் நான்கு மின்வாரிய ஊழியர்கள், அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, ஏழுமலை என்பவர் மயங்கி டிரான்ஸ்பார்மரில் தொங்கினார். இதனைப் பார்த்த சக ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கயிறு மூலம் ஏழுமலையை பத்திரமாக மீட்டனர்.