இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆடவர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இத்தொடரின் 2வது ஆட்டம் நேற்று (ஆகஸ்ட் 4) நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி 4ம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். டிராவிட் இதுவரை 314 போட்டிகளில் 10768 ரன்கள் அடித்து இருக்கிறார். அதை முந்திய ரோகித் 256 போட்டிகளில் 10831 ரன்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.