
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (ஜூன் 29) நடைபெறவுள்ளது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதும் இந்த போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றால் 2 முறை கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து பட்டியலில் இணையும். அதே போல தென் ஆப்பிரிக்கா வெற்றிப் பெற்றாலும் வரலாறு தான். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா என ஒரு முறை கோப்பையை வென்ற நாடுகளின் வரிசையில் அந்த அணி இணையும்.