டீசல் ஊற்றி பரோட்டா செய்யும் காட்சிகள்..!! இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!

தபா ஒன்றில் டீசல் ஊற்றி பரோட்டா செய்யப்படும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் கடைக்காரர் புரோட்டாவை டீசல் எரிபொருளில் கொண்டு டீப் ஃப்ரை செய்கின்றார். அந்த சமையல்காரர் ஒரு கருமையான திரவத்தால் பரோட்டாவை மூக்குகிறார். அதை படம் பிடிக்கிறவர் அது டீசல் என்று கூறுகிறார். படம் பிடிப்பவர் அதன் சுவை கேசரி போன்று இருப்பதாக கூறுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலானதை தொடர்ந்து நிட்டிசன்கள் பலரும் அந்த வீடியோவிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் இந்திய உணவு கட்டுப்பாட்டு வாரியத்தை டேக் செய்து இந்த வீடியோ குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் தபாவின் உரிமையாளர் சன்னி சிங் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார், சன்னி சிங் கூறியிருப்பது “எங்கள் தாபாவில் டீசல் பரோட்டா போல எதையும் நாங்கள் செய்வதில்லை என்றும் ஒரு பிளாக்கர் அந்த வீடியோவை பொழுதுபோக்காக எடுத்ததாகவும் டீசலில் பொறித்த புரோட்டா யாரும் சாப்பிட மாட்டார்கள் என்பது பொதுவான அறிவு, வீடியோ வைரல் ஆகியது எனக்கு தெரியாது நான் நேற்று தான் இது குறித்து அறிந்தேன். அந்த பிளாக்கர் தற்போது அந்த வீடியோவை நீக்கி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்”, என கூறியுள்ளார்.

Read Previous

#JustIN: பிசிஆர் கேசில் சிக்கப்போகும் நடிகர் கார்த்திக்? – தாழ்த்தப்பட்டோர் குறித்த சர்ச்சை ஆடியோவால் அதிரடி உத்தரவு.!!

Read Next

5 பேர் கும்பலால் ஜிம்மில் 17 வயது சிறுமி பலாத்காரம்..!! பெற்றோரின் மானப்பிரச்சனையால் விஷம் குடித்து உயிரை மாய்த்த சோகம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular