மழைக்காலங்கள் தொடங்கினாலே டெங்கு மலேரியா மற்றும் சாதாரண காய்ச்சல்கள் ஏற்படுவது வழக்கம், அப்படி இருக்கும் பட்சத்தில் டெங்குவில் இருந்து விடுபடுவதற்கு சில மூலிகை வைத்தியத்தை கடைபிடித்தால் போதும்…
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் சவாலாக இருப்பது வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டை அணுக்கள் குறைவு தான், இதனை அதிகப்படுத்துவதற்கு மருத்துவர்கள் பெரிதும் பரிந்துரைப்பது பப்பாளி சாறு, நிலவேம்பு குடிநீர், இதை மட்டுமல்லாமல் பற்படாகம், கருந்துளசி, அருகம்புல், சீந்தில், மலைவேம்பு மேலும் கண்டங்கத்திரி, விஷ்ணு கரந்தை, வில்வ இலை, தூதுவளை, பண்ணியாகிய மூலிகைகளும் டெங்குவிற்கு உதவுகிறது, சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்ற இந்த மருந்துகளை சரியான முறையில் சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் போது டெங்குவிலிருந்து நம்மால் விலகி இருக்க முடியும் மேலும் சுடுதண்ணீரை மழைக்காலங்களில் குடிப்பதன் மூலம் காய்ச்சலில் இருந்து நம்மை விடுபடுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!