மழைக்காலங்களில் டெங்கு மலேரியா மற்றும் சாதாரண காய்ச்சல் ஏற்படுவது வழக்கம் அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு டெங்குவினால் கர்நாடக மாநிலத்தில் 12 பேர் இறந்துள்ளனர், டெங்கு பாதிப்பில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது..
தென் மாநிலங்களில் டெங்கு வேகமாக பரவி வருகிறது இதில் கர்நாடகாவில் 26,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 12 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர், இந்த நிலையில் கர்நாடகாவியை ஒட்டிய தமிழக பகுதியில் டெங்கு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத் துறை அமைச்சர் மாசுபிரமணியம் அறிவித்துள்ளார் மேலும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு டெங்கு சோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துள்ளனர், டெங்கு காய்ச்சலினால் இந்த ஆண்டு தமிழகத்தில் நாலு பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் டெங்கு காய்ச்சல் மக்களை பாதிக்காதவாறு தமிழக அரசு சுகாதாரத் துறையிடம் விழிப்புணர்வோடும் கொசுக்களை ஒழிப்பதற்கான மருந்துகளை மழைக்காலங்களில் அடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் இருந்து மக்களை மீட்க முடியும் என்றும் தமிழக அரசு உடனடியாக அறிவித்துள்ளது..!!