டெல்லியில் நடைபயிற்சியை தவிர்க்க சுகாதாரத்துறை கோரிக்கை..!!

டெல்லியில் காற்று மாசு கடுமையாக உயர்ந்துள்ளதால், அங்கு நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என டெல்லி சுகாதாரத்துறை கோரிக்கை வைத்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பொது இடங்களில் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, நுரையீரல் மற்றும் இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

CO2விலிருந்து CO ஆக மாற்றம்..!!

Read Next

பருத்தி உற்பத்தி 2023-2024..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular