
- பிறந்தநாள் பார்ட்டியில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம். உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார்.!
டெல்லியில் நடைபெற்ற பார்ட்டியில் 2 சிறுமிகளை பாலியலை பலாத்காரம் செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.புதுடெல்லியில் நடைபெற்ற பிறந்தநாள் பார்ட்டியில் 2 மைனர் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள உத்தம் நகரில் பாதிக்கப்பட்ட 5 மற்றும் 6 வயது சிறுமிகளின் உறவினர்கள் அவர்களின் வீட்டிற்கு வெளியே பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்தனர்.
அப்பொழுது அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரான தீபக் என்ற 23 வயது இளைஞர் சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார்.அங்கே சிறுமிகளிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டு உள்ளார். சிறிது நேரத்தில் பெற்றோர்கள் சிறுமிகளை காணாததால் வீடு எங்கும் தேடத் தொடங்கி உள்ளனர். பின்னர் இரண்டு சிறுமிகளும் தீபக்கின் வீட்டில் இருப்பதை அறிந்த பெற்றோர்கள் சிறுமிகளை அவரிடம் இருந்து மீட்டனர்.
குழந்தைகளை துன்புறுத்ததற்காக தீபக்கை உள்ளூர் மக்கள் தாக்கி உள்ளனர். பின்பு இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு பெற்றோர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் தீபக்கை கைது செய்தனர்.இது குறித்து துணை ஆணையர் எம்.ஹர்ஷா வர்தன் கூறுகையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்ததாகவும் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவுகளுக்கு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு குடும்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.