
பாரத பிரதமர் நரேந்திர மோடி 51 ஆயிரம் அரசு துறைகளில் புதிதாக பணியமைத்தபட்டவர்களுக்கு நியமன கடிதங்களை விநியோகம் செய்துள்ளார்.
காணொளி காட்சி மூலம் நிகழ்வில் உரையாற்றிய பாரதப் பிரதமர் பல்வேறு துறைகள் குறித்து பேசி உள்ளார், பர்மா மற்றும் ஆட்டோமொபைல் போன்றவை வேகமாக வளர்ந்து வருகின்றன என்று கூறியுள்ளார். இந்திய பொருளாதாரத்திற்கு சுற்றுலாத்துறை ரூ 20 லட்சம் கோடிக்கு மேல் பங்களிப்பு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் 2030- குள் இளைஞர்களுக்கு 13 -14 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிறது என்றும் அவர் கூறியுள்ளார். உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என்று பிரதமர் கூறியுள்ளார். அதற்கு நான் முழு உத்தரவாதத்தை அளிக்கின்றேன், மேலும் அதை முழு பொறுப்புடன் செய்வேன் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
இன்று நியமன கடிதங்கள் பெற்ற அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். அவர்களை ’அம்ரீத்’ என்று அழைக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து முன்னர் குற்றத்திற்கு பெயர் போன உத்தர பிரதேசம் இன்று சட்ட ஒழுங்கு நிலைமைக்கு பின் சிறந்த முதலீடு மாநிலமாக மாறி உள்ளது என்றும் உத்திரபிரதேசத்தின் உதாரணத்தை மேற்கோள்காட்டி சிறந்த சட்ட ஒழுங்கு நிலைமைக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.